Wednesday, May 12, 2010

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம் - தொகுப்பு.

இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடத்த முற்பட்டிருப்பது, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க இந்தியாவும் இலங்கையும் இணைந்து செய்யும் கூட்டுச் சதி என்று தமிழின அமைப்புகள் குற்றம் சாற்றின.




ஐஃபா என்றழைக்கப்படும் இந்தியா சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா வரும் ஜூன் 3 முதல் 5ஆம் தேதி வரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான தூதராக அமிதாப் பச்சன் பணியாற்றிவருகிறார்.



இந்த விருது வழங்கு விழாவை கொழும்புவில் நடத்தக்கூடாது என்று தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பான சேவ் தமிழ் இயக்கம் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை பூங்கா நகரிலுள்ள நினைவரங்கம் (மெமோரியல் ஹால்) எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கொழும்புவில் விழா நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து முழங்கங்கள் எழுப்பப்பட்டன.
இனப் படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்க திரைப்பட விழாவா?

தமிழினப் படுகொலை நடத்தி அந்த இரத்தம் காயும் முன்பே திரைப்பட விழாவா? எனபது போன்ற எதிர்ப்பு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்ப்பப்பட்டன.




ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் தோழர் தியாகு, இலங்கை அரசை போர்க் குற்றவாளி என்று டப்ளினி்ல் கூடிய மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அந்நாட்டுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் உள் திட்டத்துடனும், அங்கு நடந்த தமிழினப் படுகொலையை மறைக்கும் நோக்குடனும் இந்திய சிங்கள அரசுகள் இணைந்து அரங்கேற்றும் சதித்திட்டமே இந்த விழா என்று கூறினார்.

இரண்டாவது உலகப் போரில் ஹிரோசிமாவிலும், நாகசாகியிலும் அணு குண்டுகள் வீசப்பட்டதாலாயே எப்படி ஜப்பான் அழிந்துபோய்விடவில்லையோ அதேபோல், முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையால் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் முடிந்துபோய் விடாது என்றும் தியாகு கூறினார்.




இன்றைய உலகில் சந்தையை குறிவைத்தே அரசியல் நடைபெறுகிறது, அதன் ஒரு வெளிப்பாடே இலங்கைச் சந்தையைக் கைப்பற்ற இந்தியப் பெரு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன, அந்த வணிக நோக்கத்தனை முன்னெடுக்கவே கொழும்புவில் இந்தத் திரைப்பட விழாவை நடத்துவது என்று கூறிய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், இலங்கைச சந்தையை குறிவைத்தால் தமிழகச் சந்தை பறிபோகும் என்பதை நாம் இந்த வணிகக் கூட்டங்களுக்கு உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

கொழும்புத் திரைப்பட விழாவை இந்தியாவின் அனைத்துத் திரைப்படக் கலைஞர்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தாமரை, மொழி, இன அடையாளங்களைப் புறக்கணித்துவிட்டு கலை என்று ஏதுமில்லை என்று கூறினார்.




கொழும்புவில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவின் நோக்க்ம வணிகம் தானே தவிர, கலையல்ல என்று கூறிய சேவ் தமிழ் இயக்கத்தின் செந்தில், இந்திய தொழில் நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவாக்கம் செய்துகொள்ள இந்த விழாவை ஒரு முகமாக காட்டி அதன் பின்னணியில் தங்கள் வணிக நோக்கங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன என்று கூறினார்.

இதில் தமிழர்களாகிய நாம் இந்திய தொழில் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியை குறிவைக்க வேண்டும் என்றும், அதுவே தமிழினப் படுகொலையை மறைத்து விழா நடத்தி தனது வணிக நலன்களை முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது என்றும் செந்தில் கூறினார்.




இலங்கையில் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்த அந்நாட்டு அரசியல் தலைமையுடன் கைகோர்த்து தங்கள் வணிக நலன்களை மேம்படுத்திக் கொள்ள முற்படும் இந்திய நிறுவனங்களின் பொருட்களை தமிழர்களாகிய நாம் புறகக்ணிக்க வேண்டும் என்றும் செந்தில் கூறினார்.




கொழும்புவில் திட்டமிட்டபடி இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா நடந்தால், அதன்பிறகு தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்கள் ஓட அனுமதிக்கக் கூடாது என்றும், ஃபிக்கி அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் அய்யநாதன் கேட்டுக்கொண்டார்.




இந்நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குனர் ராம், நமது நடவடிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு சென்றாக வேண்டும் என்றார். சந்தனக்காடு தொடரின் மூலம் அப்பாவி மக்கள் பட்ட இன்னல்களைப் பதிவு செய்த்தைப் போல, வன்னியில் நடந்த படுகொலையையும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிச்சயம் தான் பதிவு செய்யப்போவதாக இயக்குனர் கெளதமன் கூறினார்.



கொழும்பு திரைப்பட விழாவில் மணிரத்தினத்தின் ராவணா திரைப்படம் திரையிடப்பட்டால் அதனை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்றும், அத்திரைப்பட விழாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இயக்குனர்கள் கலந்தோலாசித்து முடிவெடுப்போம் என்றும் உதவி இயக்குனர் ராம் மோகன் வர்மா கூறினார்.

நன்றி - வெப்துனியா தமிழ்

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்



மே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு



May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai (near Chennai Central Station) | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

இனவெறி இலங்கையில் இந்தியக் கலை விழா....இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்...PROTEST TO CONDEMN AND URGE BOLLYWOOD TO CHANGE THE VENUE OF IIFA 2010 FROM COLOMBO


மே 8 | காலை 9 . 30 AM | சனிக்கிழமை | Memodial Hall, சென்னை (near Chennai Central Station) | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு



May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai (near Chennai Central Station) | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்...PROTEST TO CONDEMN AND URGE BOLLYWOOD TO CHANGE THE VENUE OF IIFA 2010 FROM COLOMBO

இந்தி திரையுலகத்தை கண்டித்து ஆர்பாட்டம்.....

உறவுகளுக்கு வணக்கம்,

தமிழர் இனப்படுகொலை நடந்த இடத்தில் இன்னும் குறுதிசுவடுகள் கூட காயாத இடத்தில் இந்தி திரையுலகினர் தமிழினப் படுகொலையை மறைத்து களியாட்டத்தில் மூழ்கிட திட்டமிடுகின்றனர். தமிழக இளைஞர்களின் சார்பாக நம் எதிர்ப்பை தெரிவிப்பது காலத்தின் கட்டாயம்.




விருது வழங்கும் விழாவின் இடத்தை கொழும்பில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் குழும உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றியடை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேழம் உரு ( மே 8) | காலை கூ : ங0 (9 . 30 AM) | காரிக்கிழமை | நினைவரங்கம், சென்னை | தமிழினப் படுகொலை நடந்த இனவெறி இலங்கையில் விருது விழா நடத்துவதை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் | சேவ் தமிழ் குழு - தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை இளைஞர்களின் குழு

May 8 | Satruday| 9.30 AM | Memorial Hall , Chennai | Protest to condemn and urge Bollywood to change the venue of IIFA 2010 from Colombo| Save Tamils | A group of IT Professionals, Chennai

Tuesday, January 5, 2010

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர்.

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது

------------------------------------------------------------------------------

?ui=2&view=att&th=1256765dae601cbc&attid=0.1&disp=attd&realattid=ii_1256765dae601cbc&zw

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும்,அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா,சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார்... சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன்... ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!''என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

நன்றி........ ஆனந்த விகடன்


Saturday, December 12, 2009

படித்ததில் பிடித்தது !!!!


எது எதுவோ அதை எப்போதும் அப்படியே விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்போம்.


------------------------------------------------------------



நான் : தமிழர்களின் உணர்வுகளும் அடையளாங்களும் இழந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழர்களின் நடுவில் தமிழர்களின் உணர்வுகளும் அடையளாங்களும் இழக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு தமிழன் நான்.

நான் : சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்.

நான் : பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்.

நான் : ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்

நான் : ஈடு இயையற்ற மற்றும் விலை மதிக்க முடியாத உயிரை தமிழ் ஈழத்திர்க்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களான போராளிகளுக்கு எனது வீரவணக்கத்தை உரியதாக்கி கொள்ளுகிறேன்.

நான் : சிங்கள ராணுவத்தின் கோர பிடியில் சிக்கி தவிக்கும் எமது தமிழ் ஈழத்தின் விடுதலை நாளை எதிர்நோக்கும் பல தமிழர்களின் நானும் ஒருவன்.

நான் : மண்ணுக்காக நாமே சிந்தும் வியர்வைதான் கடவுள்
மனிதனுக்காக மனிதன் சிந்தும் கண்ணீர்தான் கடவுள்
கடவுள் இல்லை என்னும் அறிவுதான் கடவுள்
ஆகமொத்தம் உலகில் அன்புதான் கடவுள்.

நான் : என்னயின்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமின்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலம் ஏதும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நான் எனக்கு திருநாள் ஆகும்.

நான் : திங்களோடும் செழ்ம்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுககளோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் உடன் பிறந்ததோம் நாங்கள்.

நான் : மங்கையர் தரும் சுகம் நம்
தமிழுக்கு ஈடு இல்லை.

நான் : சிங்கமேன்ற இலங்களைகளே மிகத்
திவிரம் கொள்ளுவீர் நாட்டினிலே
பங்கம் விளைந்திடில் தாய் மொழிக்கு உடல்
பச்சை ரத்தம் பரிமாரிடுவோம்.

நான் : நாம் பிறந்த சமுதாயம் எவ்வாறாக இருந்தாலும்
நாம் விட்டு போகும்போது அவை சிறந்த சமுதாயமாக இருக்க வேண்டும்

நான் : உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே.

நான் : தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம்;
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்!"

நான் : கொலை வாளினை எடடா
மிக கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா.

நான் : போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்
தொடர்த்ந்து செல்வேன் !
ஏற்றதொரு கருத்தைஎன துள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்!.

நான் : நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்.

நான் : யாதும் ஊரே யாவரும் கேளிர்.

நான் : தமிழர் என்று சொல்வோம் பகைவரை
தமை நடுங்க வைப்போம்.

நான் : எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

நான் : பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தல்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு.

நான் : வேங்குருதி தனிற் கமழ்ந்து வீரம்செய்கின்ற
தமிழ் எங்கள் முச்சாம்.

நான் : சாதி ஒழ்த்திடல் நன்று நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொண்டு.

நான் : மாதொருத்தி வேண்டும் எனக்கு தமிழ்
மகளாயிருந்தால் தான் இனிக்கும்.

நான் : தமிழுக்கு அமுதொன்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

நான் : எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை.

நான் : உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகத்திருக்கு

நான் : விழவிழ எழுவோம் விழுந்திவிடமாடோம்
விடுதலை பாதை விட்டு விலகிவிடமாடோம்.

நான் : பிறந்த குழந்தை நடந்து பழக
கையில் வேல்லை கொடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கிறிப் புதைப்போம்.

நான் : எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள்
எங்கள் நிலத்தில் உரமாகும்
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள்
எங்கள் வீட்டில் அடுப்பில் விறககும்.

நான் : சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
சுவாசம் உள்ள வரை தமிழ்.

நான் : உள்ள குறைகள் நான் தீர்ப்பேன் - தமிழ்
உலகை மிட்டுக் காப்பேன்.
தெள்று தமிழர் எங்கிருந்தாலும் - அவர்க்குத்
தீமை செய்வாரை ஒரு கை பார்ப்பேன்.

நான் : சித்திரச் சோலைகளே - உமை நன்கு
திருத்த இப்பரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் செரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே

நான் : ஒடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதைய்ப்ப ராகிவிட்டல் , ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உதைய்ப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் அய்விடுவார் உணர்ப்பா நீ.

இங்குள்ள கவிதைகள் பல எனது சொந்தப் படைப்பில்லை...எனது கருத்துகளை ஒத்தப் படைப்புகளை இங்கே பதிவுச் செய்துள்ளேன்...

Sunday, August 2, 2009

கேட்டத்தில் பிடித்தது:

கருணாநிதி என்று சொன்னால் உதடுகள் ௦௦ஒட்டாது.
பிரபாகரன் என்று சொன்னால் உதடுகள் ௦௦ஒட்டும்.
ஐயோ....ஐயோ....

Monday, July 13, 2009

தமிழன் !

தமிழா ஈழத்தில் நீ புதைக்கபடவில்லை விதைக்கபடுகிறாய்.... உனக்கு உதவமுடியாமல் இருக்கும் ஆறு கோடி மானம் கெட்ட தமிழர்களில் நானும் ஒருவன்....

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் ஸ்ரீலங்காவில் ஒரு தமிழனர்ய் பிறக்க வேண்டும், என் தமிழ் ஈழமக்கள்க்கு சேவை செய்ய....

நான் திராவிடன் என்று சொல்ல என் மனம் மறுகிறது. ஏன் என்றால் நான் திராவிடன் என்றால் என் அண்டை மாநிலத்துக்காரன் எங்களுக்கு தண்ணீர் கொடுத்திருப்பான். நான் தமிழன் தான், ஆனால் திராவிடன் இல்லை.... இல்லவே இல்லை....

ஒரு இன அழிவை கொண்டாடிய ஒரே இனம் சிங்கள இனம்....

இறுதியில் வலியாக மிஞ்சுவது எதிரிகளின் வார்த்தைகளைவிட நண்பர்களின் மௌனம் மட்டுமே !' - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

Sunday, June 28, 2009

கண்ணிர் தேசம் புத்தகத்திலிருந்து.

தலைப்பு : போர்க்காலப் பூக்கள்.

தோட்டங்கள் மத்தியில்
இவர்கள் பூக்கள்
குறிஞ்சிப் பூ போன்றவர்கள்
அரிதாக பூப்பார்கள்

அன்று,
அண்ணன் திலீபன்
காந்தியன் அகிம்சையை
இந்தியாவிற்கு
சொல்லி கொடுத்தான்....

இன்று,
அண்ணன் "புன்னகை செல்வன்"
போரின் மறுபக்கத்தை
உலகத்திற்கு
எடுத்து சொன்னான்....
சமாதான புறாகளையும்
இரையாக்குகிறார்கள்.

--------------------------------------------------------------------------------------

தலைப்பு : உலகமயமாக்கலோ?

அப்பா கனடாவில்
அம்மாவும் தங்கையும்
இந்தயாவில்
அக்கா இலண்டனில்
அண்ணாவோ நோர்வயில்
தம்பி பிரான்சில்
தாதாவும் பாட்டியும்
இன்னும் இலங்கையில்

உறவுகள் பிரிந்து
உணர்வுகள் இறந்து
தூக்கி எறியப்பட்டோம்

நலவீசாரிப்புக்கள்
நடக்கின்றன
அலைவரிசையில்

உணர்வுப் பரிமாற்றம்
தொலைபேசியில்

இதுதான்உலகமயமாக்கலோ?