Friday, May 1, 2009

ஒரு நிமிஷம் நமது இலங்கை தமிழர்களை பற்றி சிந்தியுங்கள்!!!


எங்கள் அன்புக்குரிய தமிழக உறவுகளே, 

மீண்டும் ஒருமுறை இந்திய அரசின் நயவஞ்சகத்துக்கு பலியாகி ஈழ விடுதலைப் போரின் நான்காம் கட்டத்தின் இறுதி வெற்றியை இழந்து பின்னகர்கிறோம். போரில் வெற்றி பெற முடியாத ஸ்ரீலங்கா ராணுவம் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆதரவளிக்கும் இந்திய அரசின் உதவியுடன் எங்கள் வீரர்களை நள்ளிரவில் நஞ்சுப் புகையூட்டிக் கொன்று விட்டனர். மகாபாரதப் போரில் கௌரவர் திரோபதியின் புதல்வர்களை இரவோடிரவாகக் கொன்றது போல. எங்கள் உறவுகளே இப்போது ஐந்தாம் கட்டப் போரின் ஆரம்பத்தை உங்கள் கரங்களில் தந்து காத்து நிற்கிறோம்.

எங்கள் அன்பு உறவுகளே உங்களிடம் இன்று கையேந்தி நிற்கிறோம். நாங்கள் வாழ்வதும் சாவதும் உங்கள் கைகளில். இந்த சமயத்திலாவது ஜாதி, மதம் என்னும் வேறுபாடுகளைக் கடந்து எங்கள் வாழ்வுக்காய் வாக்களியுங்கள்.ஆம்!!!!

இந்திய மத்திய அரசிலிருந்து காங்கிரசையும் அதன் ஆதரவாளர்களையும் தூக்கி எறியுங்கள் .

எங்கள் தமிழகத்து இளைய சமுதாயமே நீங்கள் போடப் போகிற ஒவ்வொரு வாக்கும் ஈழத் தமிழனின் உயிரைக் காக்கும்.

No comments:

Post a Comment