Tuesday, April 14, 2009

இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது மற்றும் வெட்கப்படுகிறது...

வடக்கே அண்டை நட்டுக்காரன் இந்தியாவுக்குள் ஒரு அடி வைத்தால்கூடஆயிரம் குண்டுகளை பொழியும் இந்தியா,தென்கோடியிலிருக்கும் தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவைஅண்டை நாடான இலங்கைக்கு தாரைவார்த்ததை நினைக்கும்பொது !!!!

சமாதானப்படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்று தமிழர்களுக்கு இந்திய இராணுவம் இழைத்தசொல்லொன்னா கொடுமைகளை நினைக்கும்போது !!!!

தமிழக மீனவர்களை தொடர்ந்து கொடுமைப் படுத்தியும்,கொன்று குவித்தும் வரும் இலங்கை கடற்ப்படையைப் பார்த்து, வடக்கே பதிலடி கொடுப்பதுபோல் இலங்கை கடற்ப்படைக்கு பதிலடியோ,மீனவர்களுக்கு பாதுகாப்போ தராமல் மெளனம் சாதிக்கும் இந்தியாவை நினைக்கும்போது !!!!

நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.நான் தமிழ்நாட்டில் பிறந்த தமிழந்தான். ஆனால் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது மற்றும் வெட்கப்படுகிறது.நான் தமிழன் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.

No comments:

Post a Comment